FacebookLike My Facebook Page

15 வயது சிறுவன் போட்ட வீடியோ அனைவரையும் கண் கலங்க வைக்கிறது – வைரலாகும் வீடியோ

நேற்று நாங்கள் பதுங்குக் குழிகளில் இருந்து இறைவனை பிரார்த்தித்தோம். இன்று எனது நண்பனும், அவனது குடும்பத்தினரும் உயிரோடு இல்லை. போர் விமானங்களின் குண்டுவீச்சுக்கு அவர்கள் பலியாகிவிட்டனர்.” என அச்சிறுவன் போட்டுள்ள கண்களை கலங்கச் செய்யும் ட்வீட் பலரையும் சோகத்திலும், சிரியாவின் சூழல் குறித்து தங்களது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பேச வேண்டிய நெருக்கடியை நோக்கி தள்ளியுள்ளது.

இது முஹமது நஜீன் போட்டுள்ள மற்றொரு உருக்கமான பதிவு :

“கௌட்டாவில் உள்ள பிற சிறுவர்களை போன்றவன்தான் நானும். பள்ளிக்கு செல்வதற்கு பதிலாக, என் தாயார் சமைப்பதற்காக நான் மரக்கட்டைகளை வாங்கச் செல்கிறேன். போர் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். நாங்கள் எல்லோரும் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்” – முஹமது நஜீன்.
“எங்களது ரத்தம் சொட்டும் படங்கள் உங்களுக்கு சலிப்படைய செய்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு உங்களிடம் தொடர்ந்து மன்றாடுவதைத் தவிர வேறு வழியில்லை!” என ஜனவரி 15ம் தேதி பதிவிட்டுள்ள நஜீம், “என்ன உலகம் இது செவ்வாய் கிரகத்திற்கு இயந்திரங்களை அனுப்புகிறது. ஆனால், எங்களை காக்க ஏதும் செய்யவில்லை”என வேதனை தெரிவித்துள்ளான்.<https://twitter.com/muhammadnajem20/status/952897447180808192
“காலம் கடந்துப் போவதற்கு முன்பாக எங்களை காப்பாற்றுங்கள்” என சர்வதேச சமூகத்தை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளான்.https://twitter.com/muhammadnajem20/status/967545083670290433?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fbioscope.in%2F15-year-old-boy-posted-syria-video%2F

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami