FacebookLike My Facebook Page

சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை: கொலைகாரனை மடக்கி பிடித்த பொதுமக்கள்


சென்னை: சென்னையில் பட்டப்பகலிலேயே கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படிக்கும் மாணவியான அஸ்வினி மதிய உணவு இடைவேளையின் போது கல்லூரி வாசலுக்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் மாணவி அஸ்வினியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் நிலைகுலைந்த மாணவி அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சியை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

எனினும் மாணவியை கொன்று விட்டு தப்ப முயன்ற அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அஸ்வினியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் அவர் உயிரிழந்து 10 நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொலை செய்த நபர் பெயர் அழகேசன் என்றும், அவனது வயது 28 என்றும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலிலே பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொலைக்கான காரணம்;

மாணவி அஸ்வினிக்கு கடந்த ஒருமாதம் முன் கொலைகாரன் அழகேசன் வீடு புகுந்து கட்டாய தாலி கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அஸ்வினி தரப்பினர் அழகேசன் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். மதுரவாயல் காவல்நிலையத்தில் அஸ்வினியின் பெற்றோர் தந்த புகார் நிலுவையில் உள்ளது. கட்டாய தாலி கட்டியதற்காக அழகேசனை காவல்தறையினர் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து தம்மை போலீஸில் காட்டி கொடுத்த அஸ்வினியை ஆத்திரத்தில் அழகேசன் கொன்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami