FacebookLike My Facebook Page

காதல் எதிர்ப்பு என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிப கும்பல்!

காதல் எதிர்ப்பாளர்கள் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் ஜோடியை பிடித்து அழைத்து வந்து காதலன் கண் முன்னே காதலியை கட்டிப்பிடித்து தங்களது ஆசையை தீர்த்துக் கொள்கின்றனர். இதை பார்த்து அவரது காதலன் அலறுகிறார்.

மேலும் அந்த பெண்ணை தகாத இடங்களில் தொட்டு தங்களது இச்சையை தீர்த்துக் கொள்வதோடு இருவரையும் தாக்குகின்றனர்.

இதை அவர்களே வீடியோவில் பதிவு செய்து வெளியிடவும் செய்துள்ளனர். உபி மாநிலம் காசியாபாத் பகுதியில் ஹபுர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

போலிசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ”எதை காரணம் காட்டி காதல் ஜோடிகளை பிடித்து வந்து அடிக்கின்றார்களோ அதையே இவர்கள் தனிமையில் சந்தர்ப்பம் கிடைத்ததும் அந்த பெண்ணிடம் செய்வது இது போன்றவர்களின் உள்னோக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது,

காதல் செய்பவர்களை உண்மையில் திருத்துவதாக கருதினால் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து அழைத்து செல்லுமாறு கூறலாம், பெற்றோர்கள் கண்டிக்க வேண்டிய விதத்தில் கண்டித்து கொள்வார்கள் மாறாக காதல் எதிர்ப்பு என்ற பெயரில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என பெண் அமைப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami