FacebookLike My Facebook Page

தனிவிமானம் அனுப்பிய அம்பானி உடலை தகனம் செய்யும் வரை கூடவே இருந்ததன் காரணம்

இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும், நடிகை ஸ்ரீதேவி துபாயில், சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார் என்ற செய்தி பரவியது

அதன்’படி, துபாய் அரசு மருத்துவமனையில், இவரது உடல்  பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது..

அரபு நாடுகளைப் பொறுத்த வரை, பிரேதப் பரிசோதனை மாதிரியான விவகாரங்களில், அரசாங்கத்தின் கெடுபிடிகளும், சம்பிரதாயங்களும், விசாரணைகளும், அதிகமாகவே இருக்கும்.

பின்னர் வெளியான இந்த பிரேதப் பரிசோதனை ஆய்வறிக்கையில்,  மது அருந்தியதால் போதையில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி இறந்ததாக குறிபிடப்பட்டுள்ளது..

பின்னர் உடலை,கொண்டுவர 2 நாட்கள் தாமதமானது. ஸ்ரீதேவியின் உடலை இந்தியா  கொண்டுவருதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் அம்பானி.. ஏனெனில் தனி விமானமே அனுப்பியுள்ளார்

ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?

தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள தான் துபாய் சென்றார் ஸ்ரீதேவி

மோஹித் மர்வா யாரை திருமணம் செய்துள்ளார் என்றால், அனில் அம்பானி மனைவியின் அக்கா மகள் அந்தாராவை தான் திருமணம் செய்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சொந்தம் என்ற காரணத்தினாலே, இறப்பு முதல் தகனம் வரை கூடவே இருந்துள்ளார் அம்பானி..

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Bitnami